காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
By: Nagaraj Wed, 05 Oct 2022 9:17:07 PM
ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைவீரர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் மூளு, மற்றும் டிராச் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
நேற்று இரவு முதல் நடந்த என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு
கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத
அமைப்பையும், மற்றொருவன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன்
என தெரியவந்துள்ளது.
டிராச் பகுதியில்
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் இருவரது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹனான்
பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.