Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 17 July 2020 09:37:43 AM

தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாவட்ட வாரியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் 4 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 17 பேர் மற்றும் உள்நாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் 5 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், ரெயில் மார்கமாக தமிழகம் வந்தவர்கள் 2 பேர் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 42 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 12
செங்கல்பட்டு - 179
சென்னை - 1,157
கோவை - 52
கடலூர் - 22
தர்மபுரி - 27
திண்டுக்கல் - 126
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 71
காஞ்சிபுரம் - 67
கன்னியாகுமரி - 146
கரூர் - 7
கிருஷ்ணகிரி - 21
மதுரை - 267
நாகை - 8
நாமக்கல் - 18
நீலகிரி - 44
பெரம்பலூர் - 10
புதுக்கோட்டை - 50
ராமநாதபுரம் - 90
ராணிப்பேட்டை - 145
சேலம் - 70
சிவகங்கை - 83
தென்காசி - 20
தஞ்சாவூர் - 25
தேனி - 78
திருப்பத்தூர் - 27
திருவள்ளூர் - 526
திருவண்ணாமலை - 212
திருவாரூர் - 20
தூத்துக்குடி - 171
திருநெல்வேலி - 130
திருப்பூர் - 39
திருச்சி - 94
வேலூர் - 253
விழுப்புரம் - 105
விருதுநகர் - 14

Tags :