Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து

திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து

By: vaithegi Wed, 02 Aug 2023 09:46:02 AM

திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து

திருச்சி : திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதன்படி திருச்சி - கரூர், கரூர் - சேலம், சேலம் - கரூர், கரூர்- திருச்சி இடையேயான முன்பதிவிலா ரயில் சேவை இன்று ரத்தாகி உள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , முதலாவதாக ரயில் எண்.06881 திருச்சிராப்பள்ளி - கரூர் ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 09.45 மணிக்குப் புறப்படும், இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

train services,trichy ,ரயில் சேவைகள் ,திருச்சி

இதையடுத்து இரண்டாவதாக ரயில் எண்.06852 கரூர் - சேலம் ரயில், கரூரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும், இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.மூன்றாவதாக ரயில் எண்.06851 சேலம் - கரூர் ரயில், முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் நான்காவதாக ரயில் எண்.06882 கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில், கரூரில் இருந்து 15.55 மணிக்குப் புறப்படும், இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :