Advertisement

டெல்லியில் இன்று முதல் 40 கூடுதல் ரயில்கள் இயக்கம்

By: vaithegi Wed, 25 Oct 2023 09:32:15 AM

டெல்லியில் இன்று முதல் 40 கூடுதல் ரயில்கள் இயக்கம்

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகரில் காற்று மாசுபடுவதைத் தடுக்க, 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு வருகிறது. ம்,மேலும் இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை நோக்கி செல்லவும், டெல்லி அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காற்று மாசுபாட்டை தடுக்க, டெல்லியில் இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. இதனால் அதிகமான மக்கள் மெட்ரோவில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் மாசு அளவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த GRAP-2 இன் கீழ் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. டெல்லி NCR பகுதியில் GRAP-2 கட்டுப்பாடுகளின் கீழ் நிலக்கரி மற்றும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

trains,delhi ,ரயில்கள் ,டெல்லி

மேலும், சாலைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். மாசுபாட்டை கட்டுப்படுத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதை போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசு தயாராகி வருவதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் டெல்லி அரசு செய்து வருகிறது. டெல்லியில் பட்டாசுக்கு தடை விதித்து உள்ளோம்.

ஆனால் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். அங்குள்ள அனைவரும் மாசுபாட்டுடன் போராடிக்கொண்டிருப்பதால், காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும் செயல்களை ஊக்குவிக்க வேண்டாம் என்பதை ஒவ்வொருவரும் வலியுறுத்த வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பால், தூய்மையான சூழல் என்ற இலக்கை அடைய முடியும். டெல்லியில் மாசு கட்டுப்பாட்டிற்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் கூறினார்.

Tags :
|