Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வழங்கல்

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வழங்கல்

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:59:01 PM

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வழங்கல்

கொழும்பு: 400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

medicinal roads,purchase,practice,basic,medicines ,வைத்திய சாலைகள், கொள்வனவு, நடைமுறை, அடிப்படை, மருந்துகள்

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் 77 வகையான மருந்துகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்திய சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Tags :
|