Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் எல்லையில் 40 ஆயிரம் சீன வீரர்கள்; பிடிவாதமான நிலைபாடு தொடர்வதாக தகவல்

லடாக் எல்லையில் 40 ஆயிரம் சீன வீரர்கள்; பிடிவாதமான நிலைபாடு தொடர்வதாக தகவல்

By: Nagaraj Wed, 22 July 2020 9:38:01 PM

லடாக் எல்லையில் 40 ஆயிரம் சீன வீரர்கள்; பிடிவாதமான நிலைபாடு தொடர்வதாக தகவல்

லடாக் எல்லையில் இன்னும் சீனா வீரர்கள் உள்ளனர்... சீனா தனது பிடிவாதமான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் லடாக் எல்லையில் நிலைமை முழுமையாக தீர்க்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து 40,000 வீரர்களை பராமரித்து வருகிறது.

பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தபோதிலும், கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வீரர்களை திரும்பப் பெறுவதற்கான உறுதிப்பாட்டை சீனா மதிக்கவில்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

“விமான பாதுகாப்பு அமைப்புகள், கவச வாகனங்கள் மற்றும் நீண்ட தூர பீரங்கிகள் போன்ற பல ஆயுதங்களைக் கொண்ட கிட்டத்தட்ட 40,000 வீரர்களை தொடர்ந்து பராமரிப்பதால் சீனர்கள் எந்தவிதமான பின்வாங்கல் அறிகுறிகளையும் காட்டவில்லை” என்று பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பாங்கோங் த்சோவில், இரு படைகளும் 4-5 கிலோமீட்டர் இடைவெளியில் நிலைகொண்டுள்ளன. ரோந்து புள்ளி 14’இல், சீன இராணுவம் 1.5 கி.மீ. பின்வாங்கியதால் இரு படைகளும் 3 கி.மீ இடைவெளியைக் கொண்டுள்ளன.

ladakh border,chinese soldiers,maintenance,40 thousand,security ,லடாக் எல்லை, சீன வீரர்கள், பராமரிப்பு, 40 ஆயிரம், பாதுகாப்பு

ரோந்து புள்ளி 15’இல், இரு படைகளும் 8 முதல் 10 கி.மீ இடைவெளியில் நிலைகொண்டுள்ளன. ரோந்து புள்ளி 17A’இல், இரு தரப்பினரும் 40-50 வீரர்களை நிலைநிறுத்தியுள்ளனர். இரு படைகளுக்கும் இடையில் 800 மீட்டர் தூரம் உள்ளது.

கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில், சீன பின்வாங்கினால், நிலம் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் என்ற எண்ணத்தால் சீனா தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை 14-15 அன்று நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர் மட்டக் கூட்டத்தில் இரு தரப்பினரும் மேலும் வீரர்கள் பின்வாங்குவதை கண்காணிப்பார்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சீனர்கள் அதன் சொந்த வார்த்தையை பின்பற்ற தயங்குவது படைகளை பின்வாங்கும் நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டும்மல்லாமல் அதன் ஆக்கிரமிப்பு எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :