Advertisement

சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Mon, 22 June 2020 12:59:58 PM

சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,madras,vulnerability,death ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு,உயிரிழப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 4,485 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,532 பேருக்கும், அண்ணாநகரில் 4,385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 5,116 பேரும், தேனாம்பேட்டையில் 4,967 பேரும், திருவொற்றியூரில் 1,545 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,719 பேருக்கும், பெருங்குடியில் 854 பேருக்கும், அடையாறில் 2,435 பேருக்கும், அம்பத்தூரில் 1,519 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 880 பேருக்கும், மாதவரத்தில் 1,135 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 775 பேருக்கும், மணலியில் 581 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|