Advertisement

உத்தர்காசியில் 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

By: Nagaraj Wed, 29 Nov 2023 5:28:15 PM

உத்தர்காசியில் 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

உத்தர்காசி: 41 தொழிலாளர்களும் மீட்பு... உத்தர்காசியில் 17 நாட்கள் சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். 400 மணி நேர போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

யமுனை ஆற்றின் பிறப்பிடமான யமுனோத்ரிக்கு பனி, மழை போன்ற எந்த காலத்திலும் செல்லும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது சுரங்கம் ஒன்று. குறுக்கே உள்ள மலையை குடைந்து அமைக்கப்படும் இந்த சுரங்கத்தின் ஒரு பகுதி கடந்த தீபாவளியன்று காலை திடீரென நொறுங்கி விழுந்தது.

ஒரு பக்கம் மலைக்கும் மறு பக்கம் கான்கிரீட் இடிபாடுகளுக்கும் நடுவே கட்டுமானத் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கி இருந்தனர். 60 மீட்டர் அளவுக்கு கான்கிரீட் இடிபாடுகள் விழுந்திருந்ததால் அவற்றை உடனடியாக அகற்றி உள்ளே சிக்கியவர்களை மீட்க இயலவில்லை.

முதல்கட்டமாக, 60 மீட்டர் தூரத்துக்கு சிறிய பைப்பை புகுத்தி, சிக்கியுள்ளவர்கள் மூச்சு விட பிராண வாயுவும், சாப்பிட உணவுப் பொருட்களையும் மீட்புப் படையினர் அனுப்பினர். அடுத்தகட்டமாக, 90 சென்டி மீட்டர் விட்டமுள்ள குழாய்களை இடிபாட்டு குவியல்களுக்கு நடுவே புகுத்தி அதன் மூலம் தொழிலாளர்களை ஊர்ந்து வெளியே வரச் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

உள்ளே இருந்த கான்கிரீட் குவியல்கள் மற்றும் தடிமனான இரும்புத் தகடுகளால் மீட்புப் பணியில் சிக்கல் நிலவி வந்தது. இதனால் 17 நாட்களாக 41 தொழிலாளர்களும் உள்ளேயே சிக்கி இருக்கும் நிலை நீடித்து வந்தது.

Tags :