Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்குவால் தற்போது வரை 4,227 பேர் பாதிப்பு- .. அமைச்சர் மா.சுப்ரமணியன்

டெங்குவால் தற்போது வரை 4,227 பேர் பாதிப்பு- .. அமைச்சர் மா.சுப்ரமணியன்

By: vaithegi Sat, 23 Sept 2023 09:56:22 AM

டெங்குவால் தற்போது வரை 4,227 பேர் பாதிப்பு-   ..  அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை:கடந்த ஆண்டுகளை விட டெங்கு பரவல் கட்டுக்குள் இருக்கிறது .. நீட் பயனற்றது என்பதை தான் 0 percentile காட்டுகின்றது, நீட் விலக்கு கோரி தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு இதை ஒரு சான்றாக சமர்ப்பிப்போம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சுப்ரமணியன் மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை பரப்புதல் , மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தி

minister m. subramanian,dengue ,அமைச்சர் மா.சுப்ரமணியன் ,டெங்கு

எனவே வீடுகளை சுற்றி தூய்மையாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்ட அளவில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குழுவாக சேர்ந்து டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து மக்களை காக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

வீடு வீடாக சென்று சோதனை செய்யப்படுவதுடன், விழிப்புணர்வு போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வீடுதோறும் வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் தற்போது வரை 4227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு அதிகபட்சமாக 7000 பேர் வரை பாதிக்க வாய்ப்புள்ளது, கடந்த ஆண்டுகளை விட டெங்கு பரவல் கட்டுக்குள் தான் இருக்கிறது. காய்ச்சல் வந்தவுடன் அலட்சியமாக இருந்தாலும், முறையான சிகிச்சை பெறாமல் இருப்பதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு வருபவர்கள் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் பயனற்றது என்பதை தான் 0 percentile காட்டுகின்றது. நீட் விலக்கு கோரி தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு இதை ஒரு சான்றாக சமர்ப்பிப்போம்” என அவர் கூறினார்.

Tags :