Advertisement

நேபாளத்தில் புதிதாக 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Mon, 15 June 2020 10:17:19 AM

நேபாளத்தில் புதிதாக 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நேபாளத்தில் இதுவரை 5760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்குநாள் உயர்ந்து வரும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையால் உலக நாடுகள் என்ன செய்வதென்று அறியாது திகைத்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் சுமார் 78 லட்சத்து 95 ஆயிரத்து 777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 432,882 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 40 லட்சத்து 56 ஆயிரத்து 063 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

nepal,coronavirus,prevalence,death toll ,நேபாளம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு நிலவரம்,பலி எண்ணிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா நோயாளிகள் மொத்த எண்ணிக்கை 5760 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிததுள்ளது. இந்த தகவலை நேபாள அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|