Advertisement

பிரேசிலில் கொரோனா தாக்குதலுக்கு 43,332 பேர் பலி

By: Monisha Mon, 15 June 2020 5:44:56 PM

பிரேசிலில் கொரோனா தாக்குதலுக்கு 43,332 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 43,000-ஐக் கடந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,67,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 17,110 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு நேற்று மட்டும் 612 பேர் பலியாகினர். தற்போது பிரேசிலில் கொரோனாவுக்கு 43,332 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

brazil,corona virus,usa,job losses,death toll ,பிரேசில்,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,வேலை இழப்புகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளது. இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் நலவாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|