Advertisement

இந்தியாவில் 45 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 26 Oct 2020 11:58:16 AM

இந்தியாவில் 45 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 79,09,960 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 480 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,infection,death,treatment ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,37,229 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 59,105 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,53,717 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.50 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 90.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 10.34 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 9,39,309 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Tags :
|
|