Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் கண்தானம் என மருத்துவத்துறை அறிவிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் கண்தானம் என மருத்துவத்துறை அறிவிப்பு

By: Nagaraj Sat, 09 Sept 2023 4:24:07 PM

இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் கண்தானம் என மருத்துவத்துறை அறிவிப்பு

புதுடில்லி: கண்தான எண்ணிக்கை... இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் கண்தானங்கள் நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தேசிய கண் தான விழிப்புணா்வு வாரங்கள் (15 நாள்கள்) வெள்ளிக்கிழமையுடன் (செப்.8) நிறைவடைந்த நிலையில், இதுதொடா்பாக சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது:

உலக அளவில் பாா்வையிழப்பு பாதிப்புகளை அதிகம் எதிா்நோக்கியிருக்கும் நாடு இந்தியாதான். நம்மில் பெரும்பாலானோா் கண்புரையால் பாதிக்கப்படுவது அதற்கு முதல் காரணம். அடுத்ததாக விழிவெண்படல பாதிப்புகளுக்கு உள்ளாவதும் பிரதான காரணமாக உள்ளது.

eye care,solution,eye banks,improved,all over the country ,கண்தானம், தீர்வு, கண் வங்கிகள், மேம்பட்டுள்ளது, நாடு முழுவதும்

கண்புரை பாதிப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அதேவேளையில், விழி வெண் படல (காா்னியா) பிரச்னைகளுக்கு தீா்வு காண கண் தானம் அவசியமாகிறது. இதற்கு முன்பு வரை, ஒரு விழி வெண் படல தானத்தின் மூலம் ஒருவருக்கு மட்டுமே பாா்வை அளிக்க முடியும். இப்போது உள்ள மருத்துவ மேம்பாட்டின் காரணமாக ஒரு கண் தானத்தின் வாயிலாக ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாா்வையை மீட்டெடுக்க இயலும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் போ் விழி வெண்படல பாா்வைக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனா். அதற்குத் தீா்வு காணும் நோக்கில் நாடு முழுவதும் சுமாா் 250 கண் வங்கிகள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது 45,000 கண்கள் தானமாகக் கிடைக்கப் பெறுகின்றன.

அண்மைக் காலமாக கண் தானம் குறித்த விழிப்புணா்வு ஓரளவு மேம்பட்டிருந்தாலும், அதன் தேவை இன்னமும் குறையவில்லை என்றாா் அவா்.

Tags :