Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Fri, 18 Sept 2020 09:22:03 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது. மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 180
செங்கல்பட்டு - 2,281
சென்னை - 9,874
கோவை - 3,602
கடலூர் - 2,326
தர்மபுரி - 942
திண்டுக்கல் - 674
ஈரோடு - 1,024
கள்ளக்குறிச்சி - 1,155
காஞ்சிபுரம் - 1,263
கன்னியாகுமரி - 764
கரூர் - 416
கிருஷ்ணகிரி - 835
மதுரை - 818
நாகை - 1,006
நாமக்கல் - 953
நீலகிரி - 618
பெரம்பலூர் - 109
புதுக்கோட்டை - 834
ராமநாதபுரம் - 272
ராணிப்பேட்டை - 597
சேலம் - 2,267
சிவகங்கை - 266
தென்காசி - 522
தஞ்சாவூர் - 1,019
தேனி - 701
திருப்பத்தூர் - 629
திருவள்ளூர் - 1,776
திருவண்ணாமலை - 1,405
திருவாரூர் - 732
தூத்துக்குடி - 789
திருநெல்வேலி - 1,044
திருப்பூர் - 1,754
திருச்சி - 880
வேலூர் - 976
விழுப்புரம் - 861
விருதுநகர் - 413
விமானநிலைய கண்காணிப்பு - 31
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :
|