Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2021 செப்டம்பரை விட 2022 செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம் உயர்வு

2021 செப்டம்பரை விட 2022 செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம் உயர்வு

By: vaithegi Fri, 21 Oct 2022 10:11:27 AM

2021 செப்டம்பரை விட 2022 செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம் உயர்வு

இந்தியா : 47 சதவீதம் உயர்வு .... உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.

இதனை அடுத்து 2021 செப்டம்பரை விட 2022 செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்து, 1.03 கோடியாக அதிகரித்துள்ளது.

2022 ஆகஸ்ட்டை விட செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து நிறுவனங்களின் பயணிகள் விமானங்களின் இருக்கைகள் நிரப்பப்படும் விகிதம், ஆகஸ்ட்டில் 72.5 சதவீதமாக இருந்து .செப்டம்பரில் 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

domestic airline passengers,companies ,உள்நாட்டு விமான பயணிகள் ,நிறுவனங்கள்

இதையடுத்து விமான சேவை நிறுவனங்களில் முதல் இடத்தில் உள்ள இன்டிகோவின் சந்தைப் பங்கு செப்டம்பரில் 57.7 சதவீதமாக இருந்தது. 9.6 சதவீத சந்தைப் பங்குடன் 2-ம் இடத்தில் விஸ்தாராவும், 8.7 சதவீத சந்தை பங்குடன் 3-ம் இடத்தில் ஏர் இந்தியாவும், உள்ளன.

மேலும் சரியான நேரத்தில் இயக்கப்படும் விமானங்கள் விகிதத்தில் 91 சதவீதத்துடன் முதல் இடத்தில் விஸ்தாரா உள்ளது.

Tags :