நேற்று நடைபெற்ற தேர்வுகளிலும் 47,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை
By: vaithegi Wed, 22 Mar 2023 1:59:10 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து அதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற பொருளியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடத்திற்கான தேர்விற்கும் சுமார் 47,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களை தேர்வு எழுத வைக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களைத் தேடி கண்டுபிடித்து தேர்வு எழுத வைக்கும் முயற்சியில் கல்வித்துறை ஈடுபட்டு கொண்டு வருகிறது.
ஆனால் இதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் சொந்த ஊரிலோ அல்லது வெளி ஊர்களிலோ பணிபுரிந்து வருவதால் இவர்களை தேர்வு எழுத வைக்க சற்று கடினமானதாக உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.