Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 13 June 2020 10:54:42 AM

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 215 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மேற்கு வங்க மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு கொரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

west bengal,coronavirus,delhi,maharastra , கொரோனா,மேற்கு வங்கம்,கொரோனா பாதிப்பு,டெல்லி

மேலும், மேற்கு வங்கத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளதால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 451 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் டெல்லி சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தொழிலாளர்கள், ஏழைகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags :
|