Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 25 June 2020 9:49:29 PM

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்தது. 7 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தது.

corona damage,ap,increase,healed ,கொரோனா பாதிப்பு, ஆந்திரா, அதிகரிப்பு, குணமடைந்தனர்

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 118 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு தற்போது 5,760 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று வரை 4,988 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கர்னூல், கிருஷ்ணா மற்றும் குண்டூரில் தலா 2 பேர் மற்றும் கிழக்கு கோதாவரியில் ஒருவரும் அடங்குவர். ஆந்திராவின் 13 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதன்படி, கர்னூலில் 72 பேர், குண்டூரில் 67 பேர், கிழக்கு கோதாவரியில் 64 பேர் ஆகும். மேலும் வெளி மாநிலம் மற்றும் பிறநாடுகளில் இருந்தும் திரும்பியவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

Tags :
|