Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 49,622ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 49,622ஆக அதிகரிப்பு

By: vaithegi Fri, 14 Apr 2023 11:48:41 AM

இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 49,622ஆக அதிகரிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில், 1,527, மகாராஷ்டிராவில் 1,086, அரியானாவில் 855, தமிழ்நாட்டில் 469, இமாச்சலபிரதேசத்தில் 440, உத்தரபிரதேசத்தில் 549,

corona,india ,கொரோனா,இந்தியா

இதனை அடுத்து குஜராத்தில் 417, கர்நாடகாவில் 498, ராஜஸ்தானில் 293, சத்தீஸ்கரில் 370, ஒடிசாவில் 258, பஞ்சாப்பில் 322, ஜம்முகாஷ்மீரில் 151, புதுச்சேரியில் 104, உத்தரகாண்டில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|