Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்த தேதி முதல் வாரம் முழுவதும் நாள்தோறும் தலா 5 விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்த தேதி முதல் வாரம் முழுவதும் நாள்தோறும் தலா 5 விமான சேவை

By: vaithegi Sun, 01 Oct 2023 4:26:29 PM

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்த தேதி முதல் வாரம் முழுவதும் நாள்தோறும் தலா 5 விமான சேவை

திருச்சி : பயணிகள் அதிகரிப்பால் விமான சேவை உயர்வு ... திருச்சி விமான நிலையத்திலிருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இதில், சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 3 சேவைகள், இதர வார நாட்களில் தலா 4 சேவைகள், பெங்களூருவுக்கு 2 சேவைகள், ஹைதராபாத் வழியாக டெல்லிக்கு ஒரு சேவை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வழக்கமாக அக்டோபர் மாதம் 29-ம் தேதி அறிவிக்கப்படும் விமான சேவைகளுக்கான குளிர்கால அட்டவணையில் திருச்சியிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, புதிதாக தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு வெளிநாட்டு சேவை அளிக்கப்படவுள்ளது.

air service,trichy , விமான சேவை,திருச்சி

மேலும் உள்நாட்டு சேவையாக மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை அக்.29-ம் தேதி முதல் 4-ல் இருந்து 5 ஆக அதிகரிக்கிறது.

அதேபோன்று, ஞாயிற்றுக் கிழமைகளில் 3 சேவைகளாக உள்ளதும் 5 சேவைகளாக உயர்கிறது. இதனால், சென்னைக்கான வாராந்திர விமான சேவை 27-ல் இருந்து 35 ஆக அதிகரிக்கிறது. இந்த விமான சேவை எண்ணிக்கை உயர்த்தப் படுவதற்கு, சென்னை - திருச்சி இடையேயான பயணிகள் அதிகரிப்பே காரணம் என்று விமான நிலைய இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கமாக சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும் நிலையில், கடந்த 3 மாதங்களாக சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடுகின்றன. இதையடுத்து, இண்டிகோ விமானம் சென்னைக்கு இயக்கப்படும் விமான சேவையை தினசரி 5 ஆக அதிகரிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :