Advertisement

தெலுங்கானாவில் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை

By: vaithegi Sat, 07 Jan 2023 6:01:57 PM

தெலுங்கானாவில்  5 நாட்களுக்கு தொடர் விடுமுறை

தெலுங்கானா: தொடர் விடுமுறை .... தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகிறது. இதையடுத்து தெலுங்கானா மக்கள் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகளில் சங்கராந்தியும் ஒன்று.

இந்த நிலையில், நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகைக்கு அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. எனவே அதன்படி, தெலுங்கானா பள்ளிகளுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 18ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

telangana,serial holiday ,தெலுங்கானா,தொடர் விடுமுறை

மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஜூனியர் கல்லூரிகளுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை முடிந்து, ஜனவரி 16ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தொடர் விடுமுறைகள் காரணமாக ஒரு பக்கம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஜனவரி 14 போகி மற்றும் 15 சங்கராந்தி இரண்டு பண்டிகைகளும் முறையே 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருவதால் மாணவர்கள் சற்று கவலையில் உள்ளனர்.

Tags :