Advertisement

5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் .. வானிலை மையம்

By: vaithegi Thu, 05 Jan 2023 2:47:11 PM

5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் ..  வானிலை மையம்

சென்னை: 5 நாட்களுக்கு மிதமான மழை .... தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் மட்டும் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது.

meteorological center,rainfall ,  வானிலை மையம் ,மழை

அதனை தொடர்ந்து ஜன. 7, 8 ம் தேதிகளில் வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் அத்துடன் மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ ஜன. 6, 7ம் தேதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :