Advertisement

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு

By: vaithegi Thu, 27 July 2023 11:12:44 AM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு

சென்னை : கடந்த 25-ஆம் தேதி வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகதிகளை கட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது

rain and meteorological research centre ,மழை ,வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் இன்று முதல் வருகிற 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிம இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :