Advertisement

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 5 முறை நிலநடுக்கம்

By: vaithegi Sun, 18 June 2023 11:28:44 AM

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 5 முறை நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இதில் முதல் நிலநடுக்கம் நேற்று பிற்பகல் 2.03 மணியளவில், ஜம்மு காஷ்மீரின் மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2- வது நிலநடுக்கம் லடாக்கின் லே பகுதியில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா-சீனா எல்லை அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இரவு 9.55 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

earthquake,jammu and kashmir ,நிலநடுக்கம்,ஜம்மு காஷ்மீர்

மேலும் இன்று அதிகாலை 2:16 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், லடாக்கில் உள்ள லே மாவட்டத்தில் இருந்து 295 கிமீ வடகிழக்கே மீண்டும் ஏற்பட்டு உள்ளது.

மேலும், 5-வது மற்றும் கடைசி நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவில் இருந்து கிழக்கே 80 கிமீ தொலைவில் 11 கிமீ ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டு உள்ளது என்று நிலஅதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :