Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவின் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

கேரளாவின் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

By: Karunakaran Fri, 07 Aug 2020 1:57:02 PM

கேரளாவின் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

இந்தியாவில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாநிலங்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட வயநாடு தொகுதிக்கு உட்பட்ட வயநாடு, இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவை நீரால் சூழ்ந்துள்ளன. கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை தீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 dead,landslide,idukki,kerala ,5 பேர் இறப்பு, நிலச்சரிவு, இடுக்கி, கேரளா

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் சிக்கினர். சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு போலீசார், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி வனம் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பினால் கேரளாவில் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், மறுபுறம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags :
|
|