தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
By: Nagaraj Tue, 08 Nov 2022 10:26:25 AM
சோமாலியா: தற்கொலை படை தாக்குதல்... சோமாலியா ராணுவ பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் பின்னணியில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
தலைநகர் மொகடிஷூவில் கடந்த 29-ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை கார்
குண்டுவெடிப்புகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம்
நடைபெற்று 2 வாரங்களே ஆகும் நிலையில், ராணுவ பயிற்சி முகாமில் தற்போது
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர்
காயமடைந்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 வார இடைவெளியில் இப்படி மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.