Advertisement

பிரதமர் வருகை... சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

By: vaithegi Sat, 08 Apr 2023 10:11:13 AM

பிரதமர் வருகை... சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு


சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வரவுள்ளதை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீஸார் குவிப்பு ... சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அடுத்தடுத்து கலந்து கொள்கிறார். . எனவே இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திட்டப்படி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு ஐதராபாத்தில் புறப்படும் பிரதமர் மோடி, 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். இதையடுத்து அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளோர் வரவேற்கிறார்கள். அங்கு ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, சென்னை - கோவை இசையாயான நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில், சேவையை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் மாலை 4.25 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று, அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி மாலை 5.45 மணி வரை ஒரு மணி நேரம் நடபெறுகிறது.

chennai,prime minister ,சென்னை,பிரதமர்

அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் புறப்பட்டு அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்தியா சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொள்கின்றனர். எனவே பிரதமர் வருகையையொட்டி காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags :