Advertisement

மாரத்தான் போட்டியில் 5 மாத கர்ப்பிணி பெண் சாதனை

By: Nagaraj Sat, 26 Dec 2020 09:44:43 AM

மாரத்தான் போட்டியில் 5 மாத கர்ப்பிணி பெண் சாதனை

கர்ப்பிணி பெண்ணின் சாதனை... பெங்களூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாதனை செய்துள்ள அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெங்களூரில் நடைபெற்ற டிசிஎஸ் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர். இதில் அங்கீதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணும் கலந்து கொண்டார்.

pregnant woman,achievement,marathon,competition,determination ,கர்ப்பிணி பெண், சாதனை, மாரத்தான், போட்டி, மன உறுதி

இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடி 10 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் தைரியமாக மன உறுதியுடன் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதோடு புதிய சாதனையும் செய்துள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இது மற்ற கர்ப்பிணிகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :