Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டை விட இந்தாண்டு 5 சதவீதம் அதிகரிப்பு... இணைய வழி குற்றங்கள் குறித்து அறிவிப்பு

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 5 சதவீதம் அதிகரிப்பு... இணைய வழி குற்றங்கள் குறித்து அறிவிப்பு

By: Nagaraj Thu, 01 Sept 2022 2:57:37 PM

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 5 சதவீதம் அதிகரிப்பு... இணைய வழி குற்றங்கள் குறித்து அறிவிப்பு

புதுடில்லி: இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடா்பான புகாா்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019-இல் 44,735 இணையவழிக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இது தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.

online,terrorism,lawsuits,registration,debit,credit,more ,இணைய வழி, பயங்கரவாதம், வழக்குகள், பதிவு, டெபிட், கிரெடிட், அதிகம்

இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கு அடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும்.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் காா்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது.

Tags :
|
|
|