Advertisement

5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 21 Jan 2023 6:29:05 PM

5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.01.2023 மற்றும் 22.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில்அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. அதனைத்தொடர்ந்து 23.01.2023 முதல் 25.01.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,southern tamil nadu districts,delta ,மழை , தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.ஏதுமில்லை.

Tags :
|