Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓரிகான் மாகாணத்தில் காட்டுத்தீயால் 5 சிறிய நகரங்கள் நாசம்

ஓரிகான் மாகாணத்தில் காட்டுத்தீயால் 5 சிறிய நகரங்கள் நாசம்

By: Nagaraj Fri, 11 Sept 2020 09:06:02 AM

ஓரிகான் மாகாணத்தில் காட்டுத்தீயால் 5 சிறிய நகரங்கள் நாசம்

காட்டுத்தீயால் 5 சிறிய நகரங்கள் நாசம்... அமெரிக்காவில் வேகமாக பரவிய காட்டுத்தீயால் ஓரிகான் மாகாணத்தின் 5 சிறிய நகரங்கள் நாசமாகி உள்ளன.

மின்னல் காரணமாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரியும் நிலையில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் வீசி வரும் காற்றால் நகர்புறங்களுக்கு தீ வேகமாக பரவி வருகிறது.

wildfire,5 small towns,rescuers,province ,காட்டுத்தீ, 5 சிறிய நகரங்கள், மீட்புப்படையினர், மாகாணம்

ஓரிகான் மாகாணத்தின் டெட்ராய்ட், சாண்டியம், பள்ளத்தாக்கு, புளு ரிவர், விடா, போனிக்ஸ் போன்ற பகுதிகளில் பெருமளவு காட்டுத்தீயின் பிடியில் சிக்கி நாசமடைந்தன. தீயின் பிடியில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புப்படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

தீயில் கருகிய நிலையில் சிறுவன் ஒருவனின் உடலும் அவனது பாட்டி உடலும் கிடைத்த நிலையில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என ஓரிகான் கவர்னர் தெரிவித்தார். கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 64,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Tags :