Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் வேகமாகப் பரவும் நிமோனியா ..5 மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரம்

சீனாவில் வேகமாகப் பரவும் நிமோனியா ..5 மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரம்

By: vaithegi Wed, 29 Nov 2023 3:11:35 PM

சீனாவில் வேகமாகப் பரவும் நிமோனியா ..5 மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரம்

இந்தியா: சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தத்தம் மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.

இதையடுத்து கர்நாடகாவில், பருவகால புளூ (seasonal flu) வைரஸின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், "பருவகால காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயாகும். மேலும் இது பொதுவாக 5 முதல் 7 நாட்கள் நீடிக்கும். இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது. இருப்பினும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும், ஸ்டீராய்டுகள் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வோருக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், காய்ச்சல், குளிர், உடல்சோர்வு, பசியின்மை , குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pneumonia,china ,நிமோனியா ,சீனா


மேலும் ராஜஸ்தானின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதன் ஊழியர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. ராஜஸ்தான் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங், காணொலி மூலம் அதிகாரிகளிடம் பேசுகையில், "தற்போது நிலைமை கவலைக்கிடமாக இல்லை , ஆனால் மருத்துவ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய்களைத் தடுக்க முழு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

அதைதொடர்ந்து உத்தரகாண்ட் சுகாதார செயலாளர் டாக்டர் ராஜேஷ் குமார் இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைக் கண்காணிக்குமாறு மருத்துவக் குழுக்களைக் கேட்டுக்கொண்டார். குஜராத் அரசும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் (Tamil Nadu Director of Public Health and Preventive Medicine) , மாநிலத்தில் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Tags :