Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு... அமைச்சர் தகவல்

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு... அமைச்சர் தகவல்

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:09:07 PM

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு... அமைச்சர் தகவல்

பெங்களூரு: நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் மான்வி அருகே கோழி கேம்ப் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 3ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் சிறுமியை, சிந்தனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையில், அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டெங்கு மற்றும் சிக்குன் குனியா பரிசோதனை நடத்தப்பட்டது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டன. பரிசோதனையில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

5-year-old girl,girl to chindanur,kozhi camp area,near manvi, ,கோழி கேம்ப், சிக்கன் குனியா, சிறுமிக்கு ஜிகா, ஜிகாவைரஸில்

இதையடுத்து சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அவர் மேல் சிகிச்சைக்காக பெல்லாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் தலைவலி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜிகா வைரஸிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த வழிகாட்டுதலை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Tags :