Advertisement

மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை

By: Nagaraj Sat, 19 Sept 2020 9:16:13 PM

மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை

5 ஆண்டுகள் சிறை... மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மழைக்கால மாநிலங்களவை கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.

harshavardhan,imprisonment,bill,complaints ,ஹர்ஷவர்தன், சிறை தண்டனை, மசோதா, புகார்கள்

இதனைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை அவமதிப்பது அல்லது தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

கரோனா தொற்று காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :
|