Advertisement

கேரளாவில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:15:37 PM

கேரளாவில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை

திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளில், ரூ. 50 கோடிக்கு கேரளாவில் மது விற்பனை நடந்துள்ளது என கேரள மது விற்பனை மைய முதன்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் கடந்த 18ம் தேதி இரவு நடைபெற்ற 22வது ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா 3வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. பரபரப்பான இறுதிப்போட்டியில் வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேர முடிவில் ஆட்டம் 3-3 என சமநிலையில் இருந்தது.

cristhumas,kerala,liquor , கிறிஸ்துமஸ், கேரளா, மது, விற்பனை, வருமானம், அதிகம்

இதனால், பெனால்டி ஷூட்-அவுட் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளில், ரூ. 50 கோடிக்கு கேரளாவில் நடந்துள்ளது என கேரள மது விற்பனை மைய முதன்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த விற்பனை வழக்கத்தை விட ரூ.15 கோடி அதிகம் என்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Tags :
|