Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் 4 மணிநேரத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

திரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் 4 மணிநேரத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

By: Nagaraj Thu, 06 July 2023 7:29:49 PM

திரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் 4 மணிநேரத்தில் இணைந்த 50 லட்சம் பேர்

நியூயார்க்: 50 லட்சம் பேர் இணைந்தனர்... டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கால் களமிறக்கப்பட்டுள்ள திரெட்ஸ் சமூகவலைத்தளத்தில் நான்கே மணி நேரத்தில் 50 லட்சம் பேர் புதிதாக இணைந்தனர்.

சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே பிரத்யேக சேவைகள், டுவிட்டர் பதிவுகளை பார்க்க உச்ச வரம்பு என எலான் மஸ்க் அடுத்தடுத்து விதித்த கட்டுப்பாடுகள் டுவிட்டர் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, திரெட்ஸ் என்ற சமூகவலைத்தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

elon musk,twitter,copy paste,threads,creation ,எலான் மஸ்க், டுவிட்டர், காப்பி பேஸ்ட், திரெட்ஸ், உருவாக்கம்

ஐபோன் மற்றும் அண்டிராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய திரெட்ஸ் செயலிக்குள் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்தே லாகின் செய்யலாம் என்றும், ஒரு பதிவுக்கு 500 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

டுவிட்டரை காப்பி பேஸ்ட் செய்தே திரெட்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளதாக ஒருவர் கேலி செய்து பதிவிட்ட டுவீட்டிற்கு எலான் மஸ்க் சிரிப்பதை போல் எமோஜி பதிவிட்டுள்ளார்.

Tags :