Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; மத்திய அரசு சட்டம் இயற்ற நீதிமன்றம் உத்தரவு

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; மத்திய அரசு சட்டம் இயற்ற நீதிமன்றம் உத்தரவு

By: Nagaraj Mon, 27 July 2020 4:13:59 PM

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; மத்திய அரசு சட்டம் இயற்ற நீதிமன்றம் உத்தரவு

ஓ.பி.சி.க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு... மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.,) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. மருத்துவ படிப்பில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது.

reservation,central and state governments,medical council ,இடஒதுக்கீடு, மத்திய, மாநில அரசுகள், மருத்துவக்கவுன்சில்

இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது.

அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை. குறைந்தபட்ச கல்வி தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags :