Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது

தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது

By: vaithegi Thu, 22 June 2023 09:39:14 AM

தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது

சென்னை: இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் .... தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை இன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

tasmac stores,sales ,டாஸ்மாக் கடைகள் ,விற்பனை


இதன்மூலம் இனி தமிழகத்தில் 5500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் 5000 கடைகளாக குறையவிருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக கோயில்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருக்கும் மதுபானக்கடைகள் முதலில் கண்டறியப்பட்டு 500 கடைகள் மூடப்படயிருக்கின்றன.

அதன் அடிப்படையில், சென்னை மண்டலத்தில் 138 , கோவை மண்டலத்தில் 78 , மதுரை மண்டலத்தில் 125 , சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 என்ற முறையே 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இன்று முதல் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags :