Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம்

கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம்

By: Monisha Tue, 21 July 2020 4:18:05 PM

கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கம்

கருப்பர் கூட்டம் என்ற யு டியூப் சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி செந்தில்வாசன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்துமத ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள யு டியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். நீக்கப்பட்ட 500 வீடியோக்களும் இந்துமத கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோக்களாக இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சேனலில் ஒரு வீடியோ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :