Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 53 ஆயிரத்து 282 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் 53 ஆயிரத்து 282 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Tue, 25 Aug 2020 09:56:55 AM

தமிழகத்தில் 53 ஆயிரத்து 282 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து மாவட்ட வாரியாக விவரம் வருமாறு:-
அரியலூர் - 515
செங்கல்பட்டு - 2,571
சென்னை - 13,255
கோவை - 3,143
கடலூர் - 3,228
தர்மபுரி - 172
திண்டுக்கல் - 912
ஈரோடு - 1,003
கள்ளக்குறிச்சி - 659
காஞ்சிபுரம் - 2,206
கன்னியாகுமரி - 1,439
கரூர் - 403
கிருஷ்ணகிரி - 301
மதுரை - 979
நாகை - 616
நாமக்கல் - 421
நீலகிரி - 322
பெரம்பலூர் - 209
புதுக்கோட்டை - 1,394
ராமநாதபுரம் - 497
ராணிப்பேட்டை - 1,054
சேலம் - 2,536
சிவகங்கை - 312
தென்காசி - 883
தஞ்சாவூர் - 880
தேனி - 1,974
திருப்பத்தூர் - 617
திருவள்ளூர் - 3,354
திருவண்ணாமலை - 847
திருவாரூர் - 570
தூத்துக்குடி - 627
திருநெல்வேலி - 1,247
திருப்பூர் - 672
திருச்சி - 947
வேலூர் - 1,161
விழுப்புரம் - 819
விருதுநகர் - 437
விமானநிலைய கண்காணிப்பு - 114
ரெயில் நிலைய கண்காணிப்பு - 4

Tags :
|