Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 53,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 809 பேர் உயிரிழப்பு

சென்னையில் 53,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 809 பேர் உயிரிழப்பு

By: Monisha Mon, 29 June 2020 1:28:14 PM

சென்னையில் 53,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 809 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகுது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1079 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நோய் பாதிப்பில் இருந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 53,762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

chennai,coronavirus,influence,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-
ராயபுரம் - 7659
தேனாம்பேட்டை - 6033
தண்டையார்பேட்டை - 6393
அண்ணாநகர் - 5740
திரு.வி.க.நகர் - 4505
கோடம்பாக்கம் - 5578
வளசரவாக்கம் - 2460
திருவொற்றியூர்- 2123
மணலி - 920
மாதவரம் - 1761
அம்பத்தூர் - 2149
ஆலந்தூர் - 1353
அடையாறு - 3290
சோழிங்கநல்லூர் -1151

Tags :