Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.82 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.82 கோடியாக உயர்வு

By: vaithegi Sun, 17 July 2022 08:46:20 AM

உலகளவில்  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.82 கோடியாக உயர்வு

ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,82,45,891 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,25,18,324 பேர் தற்போது சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

corona,treatment ,கொரோனா,சிகிச்சை

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,86,967 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகள்: அமெரிக்கா - பாதிப்பு- 9,12,50,392, உயிரிழப்பு - 10,48,822, குணமடைந்தோர் -8,65,61,774 இந்தியா - பாதிப்பு - 4,37,45,918, உயிரிழப்பு - 5,25,660, குணமடைந்தோர் - 4,30,63,651 பிரேசில் - பாதிப்பு - 3,32,90,266, உயிரிழப்பு - 6,75,353, குணமடைந்தோர் - 3,15,30,552 பிரான்ஸ் - பாதிப்பு - 3,29,42,910, உயிரிழப்பு - 1,50,576, குணமடைந்தோர் - 3,05,10,364 ஜெர்மனி - பாதிப்பு - 2,96,92,989, உயிரிழப்பு - 1,42,533, குணமடைந்தோர் - 2,76,61,800

இதை தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:- இங்கிலாந்து - 2,30,75,360 இத்தாலி - 2,00,76,863 தென்கொரியா - 1,87,61,757 ரஷியா - 1,84,85,632 துருக்கி - 1,52,97,539 ஸ்பெயின் - 1,30,90,476 வியட்நாம் - 1,07,59,850 ஜப்பான் -1,01,00,011 அர்ஜெண்டீனா - 94,26,171 ஆஸ்திரேலியா - 87,55,479 என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|