Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜுலை இறுதிக்கும் டில்லியில் 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

ஜுலை இறுதிக்கும் டில்லியில் 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

By: Nagaraj Tue, 09 June 2020 8:59:31 PM

ஜுலை இறுதிக்கும் டில்லியில் 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

ஜுலைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.5 லட்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் டில்லி துணை முதல்வர்.

டில்லியில் தற்போது இரு மடங்காகி வரும் கொரோனா பாதிப்பை வைத்து கணக்கிடும் போது வரும் ஜூலை 31க்குள் 5.5 லட்சம் பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கவர்னர் அனில் பைஜாலை சந்தித்த பிறகு மணிஷ் சிசோடியா கூறியதாவது:

5.5 lakh,coronal impact,delhi,deputy chief minister,hospitals ,5.5 லட்சம், கொரோனா பாதிப்பு, டில்லி, துணை முதல்வர், மருத்துவமனைகள்

டில்லியில் தற்போது தற்போது 12- 13 நாளுக்கு ஒரு முறை கொரோனா பாதிப்பு இரு மடங்காகி வருகிறது. இதன் அடிப்படையில் ஜூலை 31க்குள் டில்லியில் மட்டும் 5.5 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்போது 80 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும்.ஜூன் 15க்குள் டில்லியில் 44 ஆயிரம் பேரும் ஜூன் 30க்குள் ஒரு லட்சம் பேரும், ஜூலை 15க்குள் 2.25 லட்சம் பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இதனால், டில்லி வாசிகளுக்கு மட்டும், டில்லி மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு தடை விதிக்காமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர் தனது முடிவை மறு பரிசலனை செய்ய வேண்டும். தற்போது டில்லி மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீத படுக்கைளை வெளிமாநிலத்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|