Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Mon, 03 Aug 2020 09:44:20 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 875 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நோய் தாக்குதலுக்கு நேற்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 206
செங்கல்பட்டு - 2,817
சென்னை - 12,190
கோவை - 1,690
கடலூர் - 1,417
தர்மபுரி - 246
திண்டுக்கல் - 565
ஈரோடு - 162
கள்ளக்குறிச்சி - 986
காஞ்சிபுரம் - 3,439
கன்னியாகுமரி - 2,043
கரூர் - 260
கிருஷ்ணகிரி - 510
மதுரை - 2,354
நாகை - 337
நாமக்கல் - 328
நீலகிரி - 138
பெரம்பலூர் - 207
புதுக்கோட்டை - 874
ராமநாதபுரம் - 528
ராணிப்பேட்டை - 1,682
சேலம் - 1,166
சிவகங்கை - 388
தென்காசி - 1,097
தஞ்சாவூர் - 973
தேனி - 2,421
திருப்பத்தூர் - 470
திருவள்ளூர் - 3,430
திருவண்ணாமலை - 2,179
திருவாரூர் - 467
தூத்துக்குடி - 2,150
திருநெல்வேலி - 2,44
திருப்பூர் - 339
திருச்சி - 1,574
வேலூர் - 1,329
விழுப்புரம் - 979
விருதுநகர் - 2,297

Tags :
|