Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 18 June 2020 09:13:40 AM

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆளானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைச்சக அதிகாரி கூறியதாவது:-

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,54,760 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,975 பேர் பலியாகி உள்ளனர். 58,437 பேர் குணமடைந்துள்ளனர்.

pakistan,coronavirus,punjab,sindhu,death toll ,பாகிஸ்தான்,கொரோனா வைரஸ்,பஞ்சாப்,சிந்து,பலி

பாகிஸ்தானில் அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 58,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 57,868 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|