Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 25 July 2020 1:44:04 PM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தற்போது தென்மாவட்டங்களில் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் குல்லூர்சந்தை அகதிகள் முகாமை சேர்ந்த 16 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டையில் தலா 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

virudhunagar district,corona virus,infection,death,treatment ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த 10 நாள் குழந்தை, திருத்தங்கலை சேர்ந்த 9 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்கு தேவதானம், சத்திரப்பட்டி, வேலாயுதபுரம், சேத்தூர், சொக்கலிங்காபுரம், சங்கரபாண்டியபுரம், செட்டியார்பட்டி, மேலகுருனைக்குளத்தை சேர்ந்த 30 பேர், ராஜகோபாலபுரத்தை சேர்ந்த 15 பேர், இலுப்பையூரை சேர்ந்த 7 பேர், பாலையம்பட்டியை சேர்ந்த 8 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரத்தோடு சேர்த்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5662 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 43 ஆக உயர்ந்துள்ளது. தினசரி சராசரியாக 2,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் நிலையில் 10 ஆயிரம் பேரின் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் தெரிய வேண்டி உள்ளதால் முடிவுகளை விரைந்து அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|