Advertisement

சென்னையில் நேற்று முதல் 5ஜி சேவை தொடக்கம்

By: vaithegi Fri, 07 Oct 2022 10:32:43 AM

சென்னையில் நேற்று முதல் 5ஜி சேவை தொடக்கம்

சென்னை: 5ஜி சேவை .... சென்னையில் நேற்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது நேற்று முன்தினம் ஜியோ நிறுவனம் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியதாக அறிவித்த நிலையில் சென்னை உள்பட 8 நகரங்களில் 5ஜி தொடங்கியுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து ஏற்கனவே பயன்படுத்தும் சிம்மில் 5ஜி சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் 5ஜி சேவைக்காக தனியாக சிம் வாங்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் 5ஜி சேவையைப் பெறுவதற்கு 5ஜி சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

5g service,chennai , 5ஜி சேவை,சென்னை

மேலும் தற்போது 5ஜி சேவைக்காக கூடுதல் கட்டணம் பெற போவதில்லை எனவும் கூடுதல் கட்டணம் குறித்த அறிவிப்பு சில மாதங்கள் கழித்து வெளியாகும் என்றும் கேட்டறிந்தார்

மேலும் 4ஜி சேவையை விட 30 முதல் 40 சதவீத அதிவேக இன்டர்நெட் வசதியான 5ஜி சேவையை தற்போது சென்னை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :