Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது

5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது

By: vaithegi Tue, 26 July 2022 11:42:54 AM

5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது

புதுடெல்லி: இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது.

மேலும் இத்தொலை தொடர்புச்சேவையின்கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

5g spectrum,auction online ,5ஜி அலைக்கற்றை, ஏலம் ஆன்லைன்

இதை அடுத்து இந்நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் போன்ற 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதனை அடுத்து இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :