Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை தெரிவிப்பு

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை தெரிவிப்பு

By: vaithegi Fri, 17 June 2022 10:08:05 PM

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை  தெரிவிப்பு

இந்தியா: இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உ ள்ளது. இந்த ஆண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என தகவல் வெளிவந்துளது.

இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 ஜூலை மாதத்தில் நடத்தவும், 5ஜி சேவைக்கான வர்த்தக வெளியீடு சுதந்திர தினத்தன்று நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் 2022-23-ம் நிதி ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க முன் வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம்.

இதில் ஏர்டெல் நிறுவனம் முதலாவதாக சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதனால், 5ஜி ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

airtel,5g spectrum,prime minister modi ,ஏர்டெல் , 5ஜி அலைக்கற்றை,பிரதமர் மோடி

மேலும் ஏலத்தில் 72Ghz திறனுள்ள அலைக்கற்றை, 5 பில்லியன் ரூபாய் முகமதிப்புடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்தியாவில் முதல் 5ஜி சேவைகள் 13 முக்கிய நகரங்களில் தொடங்கப்படும். இந்த நகரங்களில் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகர், ஜாம்நகர், மும்பை, ஏஐ அகமதாபாத், சண்டிகர் ஆகியவை அடங்கும். மேலும் டெலிகாம் சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதற்காக நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
5ஜி அலைக்கற்றை ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை செயலாளர் தெரிவிப்பு த்துள்ளது. மேலும் ஏர்வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியுள்ளது. இதுமட்டுமின்றி ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கு 20 சமமான மாதாந்திர தவணைகளில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tags :
|