Advertisement

மேலும் 13 நகரங்களில் 5G தொடங்கப்படவுள்ளது

By: vaithegi Mon, 17 Oct 2022 9:24:16 PM

மேலும்  13 நகரங்களில் 5G தொடங்கப்படவுள்ளது

சென்னை: டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்நிலையில் மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் தசரா பண்டிகைக்கு பின் 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது.

மேலும் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, சென்னை, லக்னோ, புனே, டெல்லி போன்ற 13 நகரங்களில் 5G தொடங்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

5g,cities ,5G ,நகரங்கள்

இதையடுத்து அதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் மூலம் 5ஜி சேவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் 5G சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 4G சிம் கொண்ட பயனர்கள் 5G இணைப்புக்கு புதிய சிம் வாங்க வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
|